பக்கம்:தமிழ் உரை நடை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேல.நாட்டார் தொண்டு 187° வழியும், செய்யுள் வழியும், உரை நடை வழியும், மொழி' பெயர்ப்பு வழியும் செய்த தொண்டுகளே எடுத்துக் காட்டி யுள்ளார்; இடையிடையே பலப்பல மேற்கோள்களையும் அவர்தம் எழுத்துக்களையும் எடுத்துக் காட்டி விளக்கத் தவறவில்லை. எனவே, மேலே நாட்டாரது விரிந்த தமிழ்த். தொண்டைக் கிறித்தவமும் தமிழும் என்ற நூலில் சிறக்கக் காணலாம் ஈண்டு நாம் அம்மேலே நாட்டார் தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு எவ்வெவ்வாறு பாடு பட்டுள்ளனர் என்பதை மட்டும் கண்டு மேலே செல்லலாம். தொல்காப்பியர் காலந்தொட்டுத் தமிழில் உரை நடை நூல்கள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின் றன. என்ருலும், முடிந்த நிலையில் உரை நடை நூல் என்று. கூறும் ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. சிலப்பதிகாரம் போன்ற உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுட்கள் இரண் டொன்று அக்கால உரை நடை நிலையை நமக்குக் காட்டு கின்றன. பின்பு இடைக்காலத்தில் தோன்றிய உரை நடை களெல்லாம், முன்னேய செய்யுளுக்குப் பொருள் காணுமுகத் தான் அமைந்த உரை நடைகளாகவே அமைகின்றன. பிற்: காலத்தில் வந்த தாண்டவராய முதலியார் போன்றவர்கள் பஞ்சதந்திரக் கதை போன்ற ஒரு சில உரை நடை நூல்களே எழுதினர் என முன் அதிகாரத்தில் கண்டோம். எனினும்:அவர்கள் உரை நடை எழுதுமுன் தமிழில் உரை நடை நூல் வந்துவிட்டது. அந்த முதல் தமிழ் உரை நடை நூலே நமக்கு எழுதி உதவியவர் ஒரு மேலே நாட்டு அறிஞரே ஆவர். . 'தமிழில் தனி உரை நடை நூல் ஐரோப்பியரால் முதல் முதல் எழுதப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை." என்று திரு. சீனி. வேங்கடசாமி அவர்கள் சொல்லி, தம்: 1. கிறித்தவமும் தமிழும், பக். 21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/196&oldid=874469" இலிருந்து மீள்விக்கப்பட்டது