பக்கம்:தமிழ் உரை நடை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“190 தமிழ் உரை நடை தமிழில் முதல் முதல் உரை நடை எழுதிய மேலே காட்டு அறிஞர் ராபர்ட்-டி-நோபிலி என்னும் தத்துவ போதக சுவாமி அவர்கள் என்பதை மேலே கண்டோம். இவர் இத்தாலித் தேசத்தைச் சேர்ந்தவர். இவர்கம் தமிழ கத்துக்கு வந்ததற்குக் காரணம், சமயப் பணியேயாகும். பல இந்துக்களைத் தம் கிறித்தவ சமயத்துக்குத் திருப்பவே இவர் இங்கு வந்தார். இங்கு மதுரையில் இவர் நம் சமயத் துறவிகள் போன்றே வாழ்க்கை நடத்தினர்; இங்கு வந்த -பிறகு தமிழ், வடமொழி இரண்டையும் நன்கு கற்று, அவற் றில் நன்கு எழுதிப் பேசிப் பழகினர். எனவே, தமிழில் இவர் உரை நடை எழுதுவதில் சிறந்தவராய் விளங்கினர் என்பது சொல்லவும் வேண்டுமோ இவர் எழுதிய நூல்களைக் "கிறித்தவமும் தமிழும் நமக்குத் தொகுத்துத் தருகின்றது.' இவர் இயற்றியதை ஞானுேபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தூஷண திக்காரம், சத்திய வேத லட்சணம், சகுண நிவாரணம், பரம சூட்மமாபிப்பிராயம், கடவுணிருணயம், புனர் ஜென்ம ஆட்சேபம், கித்திய ஜீவன் சல்லாபம், தத்துவக் கண்ணுடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதம், ஞான தீபிகை, நீதிச் சொல், அகித்திய கித்திய வி த் தி ய | ச ம், பிரபஞ்ச விநோத வித்தியாசம், தமிழ் போர்ச்சுகீசிய அகராதி என்னும் பதினெட்டு நூல்களாகும். இவை யாவும் உரைநடைகளேயாகும். இவரும், இவர் போன்ற பிற மேட்ைடவரும் அக்காலத்தில் காட்டில் இருந்த வட மொழி ஆதிக்க வழியே தம் நூல்களே இயற்றியுள்ளன ரென்பது இவர் தம் நூற்பெயர்களிலிருந்தும் இவர் தம் மொழி நடையிலிருந்தும் நன்கு விளங்கும். இவரது நடையைக் காண நாமும் இரண்டொரு மேற்கோள் கண்டு செல்வோம். இவரது உரைநடை கலத்துக்கு எடுத்துக் காட்டாகத் திரு. சீனி வேங்கடசாமி அவர்கள் இவரு 1. கிறித்தவமும் தமிழும், பக். 69.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/199&oldid=874472" இலிருந்து மீள்விக்கப்பட்டது