பக்கம்:தமிழ் உரை நடை.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேல் காட்டார் தொண்டு 197 இதன் உயர்ந்த நடையும், சந்தி பிரியா வகையில் இலக்கிய இலக்கண உரையாசிரியர்களது நடைபோன்ற அமைவும், இவ் வீரமாமுனிவர் தமிழில் பெற்ற புலமை யையும் சிறப்பையும் நன்கு எடுத்து விளக்குகின்றன வன்ருே! இவ்வாறு உயரிய நடையிலே இலக்கிய இலக் கணங்கள் எழுதியது மட்டுமன்றி, அனைவரும் விரும்பி எளிதில் பயிலக்கூடிய வகையில் பரமார்த்த குருவின் கதை' என்ற ஒரு கதை நூலும் இவர் எழுதியுள்ளார். அந்தக் கதை படிப்போருக்கு இனிமை தருவதோடு, அந்த கடை .யும் மேலே கண்டபடி மிடுக்கு நடையில்லாததாய், எளிமை யுடையதாய் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகும் என்று அஞ்சி, இந்த அளவோடு இவரைப் பற்றி நிறுத்தி மேலே செல்ல லாம். ஆம்! இத்தாலி நாட்டு வீரமாமுனிவர் தமிழ் முனி வரேயாய் இருந்து இலக்கியம், இலக்கணம், செய்யுள், உரை கடை ஆகிய அனைத்துத் துறையினும் பாடுபட்டுத் தமிழை வாழ வைத்தார் என்பது பொருந்தும். செர்மனி தேசத்திலே பிறந்த இரேனியுஸ் ஐயர் (Edward Raenius) என்ற பாதிரியாரும் தமிழ் நாட்டுக்கு வந்து, பாளையங்கோட்டையில் இருந்து, பலநாள் தமிழ்ப் பணி கலந்த சமயப்பணியாற்றி வந்தார். அவர்தம் சமய உண்மைகளைத் தமிழில் விளக்கிலைன்றி மக்கள் புரிந்து கொள்ளமாட்டார்களல்லவா ! எனவே, அவர் மற்றவர் களைப் போன்று தம் சமய மெய்க் கருத்துக்களேயெல்லாம் தமிழ்ப்படுத்தினர். அதை வேத உதாரணத் திரட்டு' என்ற ஒரு தொகுப்பு நூலாக்கி வெளியிட்டார். அது உரை நடை யாலாயது. எனவே, தமிழ் உரை நடை வளர்ச்சியில் அந்த மேலே காட்டு அறிஞருக்கும் பங்கு உண்டு என்பது தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/206&oldid=874488" இலிருந்து மீள்விக்கப்பட்டது