பக்கம்:தமிழ் உரை நடை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலை நாட்டார் தொண்டு - 201: வாறு அச்சிடுவோர் தம் கருத்துப்படி சொற்களை மாற்றி அமைத்துவிட்டால், பின் உரை நடை ஆய்வு நெறி சிற் பாருக்குப் பெரிய இடையூறு நேரும்; அதன் ஆசிரியர் வட மொழி கலந்து வழங்கும் கால எல்லையிலிருந்து எப்படி உரை கடை இயற்றினர் என்பதை எடுத்துக்காட்டமுடியாது; உரை நடை வரலாறே அதனுல் நிலைகெடும். எனவே, அடுத்த பதிப்பிலாவது கழகத்தார் வேதநாயகம் பிள்ளே அவர்கள் எழுதிய உரை நடையை அப்படியே வெளியிடு வார்களென நம்புகிறேன். இவர்களேயன்றி, இன்னும் .பல கிறித்தவத் தமிழ்த் தொண்டர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தொண்டு செய்வதைக் கற்றவர் நன்கு அறிவர். இம் மேலே நாட்டார் தமிழகம் வந்த காலத்திலே உரை கடை வளர மற்ருெரு வாய்ப்பும் இருந்தது. அதுதான் அச்சு இயந்திரத் தோற்றம். ஒலையில் எழுத்தாணிகொண்டு தனித்தனி படி எடுக்கும் தொல்லையை நீக்கியதோடு ஒரே -சமயத்தில் நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான படிகளே எடுக்கும் வாய்ப்பு இவ்வச்சுயந்திர வளர்ச்சியினல் வந்ததே யாகும். இதை நம் நாட்டில் கொண்டு வந்து புகுத்திய வரும் இம்மேலே நாட்டினரேயாவர். ஏசுவின் திருத்தொண் டினேப் பரப்பிய அந்த நல்லவரே முதன்முதல் தமிழ் அச்சுப் புத்தகத்தினை வெளிக்கொணர்ந்தவர். இங்கே தமிழ் காட்டில் அச்சுப் புத்தகங்கள் வெளி வரு முன்பே, அங்கு மேலே நாட்டில் தமிழ் நூல்களை-அவர் தம் சமய சம்பந்த மான நூல்களை-அச்சிட்டு இங்கே கொண்டு வந்து மக்களுக்கு வழங்கிய அறப்பணியாளர் பலர், ஒல்லாந்து தேசத்தில் தமிழில் 1686ல் மலையாளத்துத் தாவர நூல் என்று ஒன்று அச்சிடப்பெற்றதாகக் குறிக்கின்றனர். அதில் மரஞ் 1. கிறித்தவமும் தமிழும், பக். 33.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/210&oldid=874498" இலிருந்து மீள்விக்கப்பட்டது