பக்கம்:தமிழ் உரை நடை.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.204 தமிழ் உரை நடை வளர்ச்சி அடைந்தது என்பதைக் காணல் வேண்டும். முற் பகுதியில் கண்ட ஆறுமுக நாவலர் மட்டுமன்றி, யாழ்ப் .பாணத்திலிருந்து தமிழ் பரப்ப வந்தவர் என்னுமாறு தொண்டு செய்த சி. வை, தாமோதரம் பிள்ளை, கனகசபைப் :பிள்ளை போன்ருர் தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். தமிழ் நாட்டு வரலாற்றை முதன்முதல் இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலே தொகுத்து எழுதி, 'ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்னும் நூலே ஆங்கிலத் தில் வெளியிட்ட பெருமை கனகசபைப் பிள்ளை அவர்களேயே சாரும். இவ்வாறே சி. வை. தாமோதரம் பிள்ளை அவர் களும் சில நூல்களை நன்கு அச்சிட்டு உதவினர்கள். அவர்கள் கலித்தொகை பதிப்பித்தபோது, அதன் முன்னுரை யிலே தமிழ் நூல்கள் கேட்பாரற்று நலிவுறும் நிலையைக் காட்டியிருப்பதை, அறிஞர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் தமிழ்ச்சுடர் மணிகள் என்னும் தமது நூலிலே நன்கு எடுத்துக்காட்டி, திரு. சி. வை. தாமோதரம் பிள்ளே அவர் களுடைய தமிழ் உள்ளத்தை நன்கு புலப்படுத்தியுள்ளார் கள். நானும் அவர்தம் முன்னுரைப் பகுதியை எடுத்துக் காட்டி, அவர் உள்ளத்தைக் காட்டுவதோடு, நம் ஆராய்ச்சிக் காலத்து உரை நடைப் போக்கையும் காட்டலாம் என .கினைக்கின்றேன். 'ஏடு எடுக்கும்போது ஒரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும்போது இதழ் முரிகிறது. ஒற்றை புரட்டும்போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்ருல், வாலும் தலையு மின்றி, நாலு புறமுங் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது......' - 1. The Tamils 1800 years ago.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/213&oldid=874504" இலிருந்து மீள்விக்கப்பட்டது