பக்கம்:தமிழ் உரை நடை.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தமிழ் உரை நடை அவர் பெரிய புராண உரை நடையில் ஒரு சிறு பகுதி காட்டி அமையலாம் என நினைக்கின்றேன் : "அதுகண்டு, தந்தையாராகிய சடையனர், ஆதி சைவ குலத்திலே தம்முடைய கொள்கைக்கு ஏற்பப் பந்துவாய்ப் புத்துரிலிருக்கிற சடங்கவி சிவாசாரியாரிடத்திலே, அவருடைய புத்திரிக்கும் தம்முடைய புத்திரருக்கும் விவாகம் பேசி வரும் பொருட்டு, சில முதியோர்களை அனுப்பினர். அவர்கள் சடங்கவி சிவாசாரியாரிடத்திற் போய்ப் பேசி, அவர் உடன் பட்டது கண்டு, சடைய னரிடத்துத் திரும்பிப் போய்த் தெரிவித்தார்கள். அப்போது சடையனர் மகிழ்ச்சி கொண்டு, விவாகத் துக்குச் சுப தினமும் சுப முகூர்த்தமும் நிச்சயித்து, தம்முடைய ஞாதிகள் சிநேகர்கள் யாவரையும் விவாக பத்திரம் அனுப்பி அழைப்பித்தார். பின்பு நம்பியூயாரூராகிய சுந்தரமூர்த்தி நாயனர் விவாக தினத்திற்கு முதற் றினத்திலே சமாவர்த்தனம் பண்ணி, ரக்ஷாபந்தனஞ் செய்து, மற்ற நாள் நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு, திருமணக் கோலங் கொண்டு, குதிரைமேல் ஏறி, மகாலங் காரத்தோடு புத்துதுரிலே சடங்கவி சிவாசாரியார் வீட்டிலே திருக் கல்யாணப் பந்தருக்குமுன் சென்று, குதிரையினின்றும் இறங்கி, உள்ளே போய், ஆசனத்தில் இருந்தார்.' இவ்வாறு நாவலர் தம் உரை நடை வடமொழி கொண்டு எளிமையோடு இயங்குகின்றது. என்ருலும், அவர் தமிழைக் கண்ணெனப் போற்றி வளர்த்தவர் என் பதை அனைவரும் அறிவர். அவர் கால கிலேயும், அவர் சமயக் கோட்பாடுமே அவரை வடமொழிச் சொற்களை அதிகம் கலக்கச் செய்தன. இன்று அவருடைய உரை கடை 1. நாவலர்-பெரியபுராண வசனம், பக், 10, 11,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/221&oldid=874523" இலிருந்து மீள்விக்கப்பட்டது