பக்கம்:தமிழ் உரை நடை.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தமிழ் உரை நடை 'இனி, நப்பூதனர் என்னும் நல்லிசைப் புலவர் 'முல்லை என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய்யுள் இயற்றுகின்ருர் ஆகலின், அதனேடு இயை புடைய வஞ்சி யொழுக்கத்தை அரசன் பகைமேற் சென்று பாசறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத் தால் இதன்கண் அமைத்துக் கூறுகின்ருர். இவ்வாறு தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு மாறுபடாமல் இவ்வாசிரியர் வேறு பொருளை இதன்கட்பொருத்தி உரைக்கும் நுணுக்கம் மிகவும் வியக்கற்பால தொன்ருகும்.' - இவ்வாறு இந்த நூற்ருண்டின் விடியலிலே தமிழ் உரைத் தொண்டின் பணி தொடங்கி, இன்று நாம் வியக் கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. 1. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, பக். 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/227&oldid=874535" இலிருந்து மீள்விக்கப்பட்டது