பக்கம்:தமிழ் உரை நடை.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழ் உரைநடை றும் காணல் வேண்டும். வடமொழிச் சொற்கள் அதிகமாக உபயோகித்திருப்பதையும் நம்மால் எடுத்துக்காட்டாதிருக்க முடியவில்லை. இந்த நூற்ருண்டின் தொடக்கத்திலே பிற சமயங் களோடு போட்டியிட்டு வளர வேண்டியிருந்த சைவம் வைணவம் என்ற இரு உள்நாட்டுச் சமயங்களும் மொழித் தூய்மையை மறந்து, சமய வளர்ச்சிக்காகப் பல வட மொழிக் காப்பியங்களின் துணையை நாடின. முன் சில: நூற்ருண்டுகளிலே சில இலக்கியங்கள் தமிழில்-செய் யுள் நடையில்-மொழி பெயர்க்கப்பட்டன. ஆனல், இந்த நூற்ருண்டில் அவை பெரும்பாலும் உரை நடையில் மாற்றி அமைத்து எழுதப்பெற்றன. ஒரு சிலரே அறிய முடிந்த பா நடையிலும் பலரும் அறிந்துகொள்ளும் வகைக்கு உரை நடை பயன்பட்டது என்பது பொருத்தமே. எனவே, அப்படிச் சமயக் கதைகளே உரை நடையாக்கும்போது வடமொழிச் சொற்களே அப்படியே பெய்தார்கள். தனித் தமிழ் நடையை வளர்த்த முன் கண்ட அறிஞர் மறைமலை அடிகளார் காலத்தில் இவ்வாறு வடமொழி கலந்தும் எழுதும் வழக்கமும் அதிகமாய் இருந்தது. சாதாரண மக்கள் மட்டு மன்றிப் பேராசிரியர்களாய்ப் பணியாற்றிய திரு. செல்வக் கேசவராய முதலியார் போன்றவர்தம் உரை நடையிலும் அந்த வடமொழிக் கலப்பை அதிகமாகக் காணலாம். அவர் உரை நடை பற்றியே வசனம்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு சில இடம் காணின் இவ்வுண்மை நன்கு விளங்கும். எனவே, இரண்டு காணலாம்: "பத்தொன்பதாவது நூற்ருண்டின் பிற்பகுதி யில் பாலியர்களும் பாலிகைகளும் படித்தற்கான பல வசன நூல்கள் ஏற்பட்டன. இவற்றில் கண் டதும் கேட்டதுமான சிலவற்றை எடுத்துரைப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/233&oldid=874549" இலிருந்து மீள்விக்கப்பட்டது