பக்கம்:தமிழ் உரை நடை.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ் உரை நடை. á .x . . - வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்கிற விதி,இதற்கு முற்றும் பிரயோகமாகாது. கவிகள் போலவே கட்டுரை எழுதுவோரும், கருவிலே திரு வுடையவர். நாநலமுடைமை பிறவிக் குணங்களில் ஒன்று. தெய்வப் புலவனுக்கு நா உணரும் (சித்திர ஓடாவிக்குக் கை உணரும்), என்பது கவிநடைக்கு மாத்திரமேயன்றிக் கட்டுரை நடைக்கும் பொருந்து வதாகும். சிறந்த வசன நடையின் திறங்களைக் கூர்ந்து உய்த்துணர்ந்தவர் கண்டபடி வசனத்தில், உரிய சொற்களாகிய நன்மொழி யுணர்த்தியும், நவின்ருேர்க்கினிமை தருவதான ஒசையூட்டியும், செவ்வி செய்த நடையாகிய நவநீதம் தெய்வப் புலவர் எனப்படும் வாக்கிகட்கே கைவல்யம்' 'இங்ங்னம் இழுமென் மொழியான் விழுமியது. நுவலும் நோக்கம் இல்லாதவன் நூலெழுதப் புகுதற்பாலன் அல்லன். அவன் அது செய்வது. வெறுஞ் சட்டி தாளிப்பதே. தனது மனத்தின் இயல்பான போக்குக்கு மாருன பொருள்களின் கூறு பாடுகளை விரித்தற்பொருட்டும் ஒருவன் நூலெழுதப் புகுதற் பாலன் அல்லன். அவன் அது செய்தல் அகாரியமே. மனப் போக்கொடு மாறுகொள்ளாமல் பொருந்திய விடத்தும், கூறலுற்ற பொருளின் கூறு பாடுகளைப் பூர்வோத்திரமாய்த் தீர்க்கமாக அறியா யாதவன் எழுதலான நூல், சென்று தேய்திறுத லாகும். அந்நூல் குறை குடமே. பிறருடைய நடையின் போலியாக எழுதப் புகுவது, அன்ன நடை நடக்கப் போய்த் தன்னடையும் கெடுவதே. பிறர் பின்பற்றத்தக்க நூண்டை தீர்ந்த நடையாகக் கொள்ளப்படாது. பிறர் நடைன்யப் பின்பற்றிய நூல், திட்பமும் நுட்பமும் இல்லாததேயாகும். பிற நூற்பொருளையும் பிற நூல் நடையையும் 1. தமிழ் வியாசங்கள், பக். 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/235&oldid=874553" இலிருந்து மீள்விக்கப்பட்டது