பக்கம்:தமிழ் உரை நடை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைகடையின் தோற்றமும் வளர்ச்சியும் 23 இவைகளைத் தவிர்த்து மிகப் பிற்காலதது என்ருே வாழ்ந்த புகழேந்திப் புலவர் பேரில ஒரு சில நூல்கள் வெளிவந்தன. அல்லி அரசாணி மாலே, பவளககொடி மாலை, புலந்திரன் களவு போன்ற நூல்கள் இவை. இவை எல்லாம் அகவற் பாவை ஒத்து நடந்தன என்ருலும், இவை உரைநடையை ஒத்தே நடைபோடுகின்றன என்ன லாம். இவையெல்லாம் அறிஞரால் போற்றப் படாதன வாய்ப் பாமரமக்க ளிடத்து-கல்வியறியா மக்க ளிடத்துஅடைக்கலம் புகுந்துள்ளன என்னலாம். மிகவும் பிற்காலத்தில் கடந்த-இரண்டொரு நூற் ருண்டுகளிலேதான் தமிழில் தனித்த உரைநடை நூல்கள் தோன்றின என்னலாம். மேலே நாட்டிலிருந்து இந்திய காட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் சமயம் பரப்ப வந்த பாதிரிகள் தங்கள் சமய நூலாகிய விவிலிய நூலேத் தமிழில் மொழி பெயர்க்க அரும்பாடு பட்டார்கள் என் பதை அறியாதார் யார்? அவர்கள் விவிலிய நூல் உரை நடையாலானது. உரைநடையே மக்களுக்கு எளிதில் விளங்குவது. எனவே அவர்கள் உரைநடையிலேயே விவிலியத்தை மொழி பெயர்க்க முயன்ருர்கள். என்ருலும் இன்று வரையில் நல்ல துளய தமிழில் அமையப் பெற்ற விவிலியத்தின் உரைநடை இல்லை என்னலாம். மொழி பெயர்ப்பெல்லாம் பிறமொழிக் கலப்பு மிகுந்த தமிழ உரைகடைகளாகவே உள்ளன. என்ருலும், அம்மொழி பெயர்ப்புக்களே தமிழ் உரைநடையை வளர்க்க உதவின. என்பதை மறுப்பார் யார்? இனி, பாட்டாலேயே நாட்டுக் கதைகளைப் பாடி வந்த தமிழ் இலக்கிய வானில் உரையால் கதைகளைப் புனேந்து காட்டும் ஒரு புதுமை தோன்றும் காலமும் வந்துவிட் டது. இத்தாலி நாட்டிலிருந்து இங்கு வந்து தமிழராய் வாழ்ந்த குருமகனர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/32&oldid=874605" இலிருந்து மீள்விக்கப்பட்டது