பக்கம்:தமிழ் உரை நடை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தமிழ் உரை நடை சிறுகதையாயினும் கட்டுரையாயினும் இப்பகுப்பு முறை இருந்தாற்ருன் சிறந்து கிற்கின்றது. உரைநடையை மூன்று வகையாகப் பிரித்ததை மேலே கண்டோம். அதை மற்ருேர் ஆங்கில ஆசிரியர், ஐந்து வகை யாகப் பகுக்கின்ருர், கதைப் போக்கு (Narative).கொள்கை o?orig, (pGDD (Argumentative), 5T gb (Dramatic), செய்தி தரும் முறை (Informative), ஐயமகற்றும் ஆய்வுமுறை. (Contemplative) என்ற ஐந்து வகையில் அவர் உரை நடையை அடக்குகிருர். இவ்வாறு பகுக்கப்பட்ட உரை கடைகள் தனித்தனி வெவ்வேறு திறனும் முறையும் பெற்ற வையாய் இருப்பினும், அனைத்தும் நல்ல ஓசை நயம் உடைய நடையை மேற்கொண்டாற்ருன் சிறக்கும் என்பதை அவர் தெளிவுறக் காட்டுகிருர். சொற்களே உபயோகிக்கும் முறையைப் பற்றி மார்ஜோரி பெளல்டன்' என்பார் கூறும்போது நெடுஞ்சொற்களை உப யோகித்தால்தான் உரைநடை சிறக்கும் என்று எண்ணு வோர் தவறுடையவர் என்பதை விளக்குகின்ருர்; நீண்ட சொற்களை உபயோகித்தல் குறை அறிவுடையோர் செயல் என்றும், சிறு சொற்களால் எடுத்ததை விளக்குவதே நிறை: அறிவுடையோர் செயல் என்றும் மேற்கோளுடன் எடுத்துக் காட்டுகிருர். இன்றும் ஆங்கில உரைநடை எழுதுபவர்கள் இடையிடையே இலத்தீன் தொடர்களைப் பெய்து எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கிருர்கள். சிலர் பழமையையும் புதுமையையும் விரவி எழுதுவதை விரும்புகின்றனர். இவற். ருல் எல்லாம் உண்மையில் பொருளே உணர்த்த முடியாது. என்பது அவர் எண்ணம். ஜேம்ஸ் ரீவ்ஸ் என்பவர் நீண்ட 1. Marjorie Boulton–The Anatomy of Prose 2. The Anatomy of Prose, p. 11. 3. James Reeves

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/63&oldid=874738" இலிருந்து மீள்விக்கப்பட்டது