பக்கம்:தமிழ் உரை நடை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v ளேன். உரையாசிரியர்களை இரு பகுப்பாகப் பிரித்து, காலத் தால் முன்னைய பின்னைய உரையாசிரியர்களாக்கி, அவரவர் தொண்டுகளையும் காட்டியுள்ளேன். பிற்காலத்தில் மேலை நாட்டார் உரைநடைக்குச் செய்த தொண்டினையும், இன்று உரைநடை வளரும் நிலையையும் காட்டியுள்ளேன். இவ்வாறு என் ஆய்வு நிலைக்கேற்பத் தமிழ் உரைநடை பற்றியும், அது அன்று தொட்டு இன்றுவரை வளர்ந்த நிலைபற்றியும் இந் நூலில் ஒரளவு எடுத்துக்காட்ட முயன்றுள்ளேன். 'தமிழ் உரைநடை இலக்கியங்களின் வளர்ச்சி வரலாற்றைத் திட்ட மாய்த் துணிந்து எழுதுவதற்கு வேண்டிய துணைக் கருவிகள் இலவெனினும், கிடைக்கின்ற கருவிகளைக் கொண்டு ஒருவாறு துணிந்து எழுதலாம் (கலைக் களஞ்சியம், Vol. V பக். 499த 500) என்ற கூற்றின்படி இவ்வுரைநடை ஆராய்ச்சி பற்றி ஆராய்ந்து நான் என்னல் இயன்ற அளவு முயன்று இந்நூலை முடித்திருக்கிறேன். இத்துறையில் தமிழில் இது முதன் முயற்சி. தவறுகள் இருப்பின், காணும் அறிஞர்கள் காட்டுவார்களாயின், அடுத்த பதிப்பில் இந்நூல் திருத்தம் பெற வழியாகும். யுைಡ್ತಿ வெளிவர உதவிய அனைவருக்கும் நன்றி - 6ᏈᎢ . சென்னை 30 அ. மு. பரமசிவானந்தம். தமிழ்க்கலை இல்லம் 1. 7. 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/7&oldid=874752" இலிருந்து மீள்விக்கப்பட்டது