பக்கம்:தமிழ் உரை நடை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் உரை நடை - ஒர் பத்தினிக் கடவுளாகும் என, நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து, நித்தல் விழா வணி நிகழ்வித்தோனே. . மேற்கண்ட பகுதி சிலப்பதிகாரப் பகுதியேயாகும். சேரன் செங்குட்டுவன் விழாவிடை வந்த மன்னர் பலர் கண்ணகிக்குத் தத்தம் நாடு நகரங்களிலே கோவில் எடுக்க ஏற்பாடு செய்து, தத்தம் காட்டில் பத்தினித்தேவி வழி பாட்டை நிலைநிறுத்த முயன்ற செய்தியை நூலிலே ஆசிரியர் கூறுகின்ருர். என்ருலும், இந்த நூலின் அடிப்படை, கடவுள் பத்தினியாம் கண்ணகியைப் பாரறியச் செய்வதே ஆதலின், அந்தப் பயன் பெற்ற மகிழ்ச்சியை முதலாவ, தாகக் காட்டிப் பின் கதைக்குள் புகுந்து மங்கல வாழ்த்துக் காதையை ஆரம்பிக்கிருர். எனவே, இளங்கோவடிகள் உரைநடையை முன் வைத்து உள்ளத்தைக் காட்டி மெல்ல மெல்லக் கதையில் செல்வது விளங்கும். இனி, இவ்வுரைகடையை ஆராய்து பார்க்குங்கால் நமக்கு இதன் சிறப்பும் ஏற்றமும் அமைப்பும் விளங்கும். கண்ணகிக்கு மூவேந்தர் தமிழ் நாடும், ஈழமும், கொங்கும் செய்த சிறப்பை விளக்க வந்த ஆசிரியர் தம் உரை நடையையே சிறப்புடையதாக்கிச் செல்லுகின்ருர். அவர் காலத்துப் பெரு வழக்கிலில்லாத ஓர் உரை நடை. இது. புதிதாகப் புகுத்துங்கால் தோன்றும் கிளர்ச்சி, எதிர்ப்புக் களேயெல்லாம் எண்ணியிருக்கும் அவர் உள்ளம். என்ரு. லும், உரை நடையை ஆக்க வேண்டும் என்ற உணர்வு மட்டும் நீங்கவில்லை. எனவே, அம் முதல் உரை நடையை உயர்நடையில் செய்யுட் பாட்டோ' என நினைக்கும் வகையில் எழுதியிருக்கிருர். எனினும், இது அன்றைய சிறந்த உரைநடைக்கு நல்ல எடுத்துக்காட்டாய் அமைந்து நிற்கிறது. இதன் கருத்து என்ன்? பாண்டியன் தவறு செய்ய, அதல்ை நாடு கல மிழந்தது. அதை அறிந்த வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/77&oldid=874764" இலிருந்து மீள்விக்கப்பட்டது