பக்கம்:தமிழ் உரை நடை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடையில் ஒரு மைல் கல் 85, மேலே நாம் கண்ட உரைநடை, இலக்கணத்துக்குப் பொருந்த விழுமிய நடையும் ஒழுகிய ஓசையும் கொண்டு செல்லுகின்றது. மற்றும் அகவற் பாக்கள் நீண்டு செல் வது போன்று, இவ்வுரைநடையும் மிக நீண்டு சென்று முடிகிறது. பாட்டில் அளபெடைகள் வருவன போன்றே, ஈண்டும் அளபெடைகளைக் காண்கிருேம். சாதாரண உரைநடை அமைப்பில் காணும் எழுவாய் பயனிலை வைப்பு முறைக்கு மாருக முன்பின்னக மாறிப்பாட்டிடை பயிலும் நிலையும் சிலவிடங்களில் அமைக்கப் பெற்றுள் ளது. இவ்வாறு இவ்வுரைகடை பல வகையில் பாட் டின் தன்மையை ஒட்டி நின்ருலுங்கூட இது பாட்டன்று என்று கூறும் வகையில் உரைநடையாகவே செல்லுதல் உண்மை. இவ் வாறே இவ்வுரைகடை முழு தும் செல்கின்றது. - இவ் வுரைகடையின் வழி எப்படி நூலுக்கு உரை கண்டார்கள் என்பது விளங்குகின்றது, அத்துடன் இது சங்க காலத்தது என்ற உண்மையும் தெளிவாகிறது. சங்கப் புலவர் காற்பத்தொன்பதின்மரும் இந்நூலுக்கு உரை கண்டார்கள் என்பதும், அவற்றுள் சிறந்தது நக்கீரர் உரையே என்பதும் உருத்திரசன்மன் கண்ணிர் வழி இது நிறுவப்பெற்றதென்பதும் அ றி கி ருே ம். இதைக் கொண்டே இவ்வுரை சங்க காலத்தது என வாதிப்பர். அவர் கூற்றுப் பொருந்தாது. நக்கீரர் கூற உருத்திரசன்மர் கேட்டனரே யன்றி, அதை நக்கீரர் எழுதி வைத்துப் பாதுகாக்கவில்லை. அவர் சொல்லிக் கொண்டே வந்தார்; அனைவரும் கேட்டு அதுவே சிறந்தது என ஏற்றுக் கொண்டனர். பின்பு நக்கீரரே கீரங் கொற்றனருக்கு உரைக்க, அது வழி வழி வந்தது என உரையின் அடுத்த பகுதி கூறுகின்றது. நக்கீரர் எழுதி அறுதியிட்டு வைத் திருப்பாராயின், இவ்வாறு பின் கூறப்படுவது எவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/94&oldid=874783" இலிருந்து மீள்விக்கப்பட்டது