பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மனிதர்கள் உருவத்திலும், குனத்திலும் திறமையாலும், வேறுபடுவது போல் மொழிகளும் தம் இயல்பால் வேறுபடுகின்றன என்பதுவே உண்மை. இதனை தமிழறிஞர்கள் உணர வேண்டும்.

“மனிதன் தானாக பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக்கூடதாவன், என்றார் பெரியார்.

இதன் பொருள் பிறருக்காக அதன் பொருட்டும் பகைமை கொள்ளாமல் அன்பு கொண்டு அதனை உலக மக்களுக்காக, வாழ்வது என்பதே.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அகன்ற பார்வையுடன் சொன்ன தமிழ் மொழியின் வாசகம் வெறும் வார்த்தை விளையாட்டல்ல அது உலக மொழிகளுக்கும் மக்களுக்கும் ஒதும் வாழ்க்கைநெறி என்பதை மொழி உணர்வாணர்கள் புரிதல் வேண்டும் அதன் விளைவே என் தந்தையாரின் படைப்புலகில் மொழியியல் சார்ந்த இந்நூல்.

இது ஒரு மொழியை கற்கும், வளரும் பருவத்தினருக்கு மொழியின் தோற்றவாயை கற்றுத் தரும் அரிச்சுவடு.

இதனை வெளியிட்டு சிறப்பு பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம் அவர்களுக்கு என் நன்றி

அன்புடன்
கோ. எழில்முத்து