பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 103

ஒலைப் பிரதிகளில் புள்ளி வைத்து எழுதும் பழக்கமே இல்லை ஒதும்பொழுது விடப்பட வேண்டிய எழுத்து களையே புள்ளி குறிக்கும் வட்டெழுத்தில் வலப்புறத்தில் வரும் படுக்கைக் கோடு கொ என்பதற்கு இருப்பதைவிட கோ என்பதற்கு நீண்டிருக்கக் காண்கிறோம்

கோ எனக் கொம்பை மேலே சுழித்து பெருகிவேறு படுத்தினார் என்பர் (பார்க்க : கெ) கொ என்பதன் வடிவ வரலாறே கோ என்பதற்கும் ஒக்கும்

பொருள் : கோத்தல் என்ற வினைப்பொருளிலும் அரசர், குயவர், தந்தை முதலான பெயர்ப்பொருளிலும் கோ என்பது தமிழ்ச் சொல்லாய் வழங்கும். வட மொழிச் சொல்லாயும் பசு, துறக்கம், உலகம், கதிர், நீர், சொல், சாறு முதலிய பொருள்களில் வரும்

க்+ஒள என்ற இரண்டு எழுத்தினையும் உயிர்மெய்யெழுத்து என ஒன்றாகக்கொண்டு கெள என எழுதுவர் கெ+ள என வரும் ஒலிக்கும், க்+ஒள என வரும் ஒலிக்கும், எழுத்துமுறையில் வேறுபாடு காண்பது முடியாது ஒலையில் புள்ளியே இல்லாமல் எழுதும் பொழுது க்+ஒள+வி என்பதனையும் கெ+ள+வி என்பதனையும் வேறுபடுத்துவது இயலாது. இது காரணமாக இத்தகைய மயக்கத்திற்கு இடம் இன்றி ஒள என்பதற்கு வேறு ஒருவடிவம் அமைய வேண்டும் என்பது பலர் எண்ணம். தமிழில் ஒள என்பதே