பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 105

இது தமிழ் நெடுங்கணக்கில் 'க' என்பதின் பின் வரும் மெய்யெழுத்தாம்'க'என்பது வல்லெழுத்தானால் அதற்கி னமான மெல்லெழுத்து ‘ங்’ என்பதாம். இதனை ஒலிக்கும்போது மெல்லெண்ணத்தை, அதற்கு நேருள்ள அடி நா ஒற்றும்; குரல்வளை இதழ்கள் துடிக்க ஒலிப்பெழும்; வாயிலிருந்து மூக்கிற்குச் செல்லும் வழியினை மெல்லண்ணம் மூடி நிற்கும் நிலை இங்கில்லை; ஆதலின் ஒலி வடிவாக வரும் மூச்சு மூக்கின் வழியாகவும் வெளிவரும்; எனவே இது மூக்கொலி எழுததாம

‘ங்’ என்பது அகரச்சாரியையோடு வந்து 'ங்' என்ற எழுத்தைக் குறிக்கும் பண்டைய நாளில் ‘ங்’ என்ற மெய்யெழுத்தே யன்றி ‘ங்’ முதலிய உயிர்மெய் எ ஏத்துக்கள் சொற்களில் வழங்கவில்லை. ‘ங்ப்போல் வளை’ என்ற ஆத்திசூடியைக் காண்க. ஆதலின், ககரத்தின் முன்வரும் மகரம் அல்லது மெல்லெழுத்து எனக் கொள்வதன்றி அதனைத் தனியே வேறொரு ஒலியன் (Phoneme) என்று கொள்வதற்கில்லை. மகரத்தின் மாற்றொலியன் (Allophone) என்று கொள்வதற்கே இடமிருந்தது. ஆனால் 'நன்கனம் முதலியன போல அமைந்த அங்கனம்’ (அங்கு+அன்+அம்) என்பதில் பின்னாளில், ககரம் ங்கரமாக மெலிய, அது 'அங்ங்னம்’ என ஒலிக்கப் பெற்றது. இவ்வாறு வல்லெழுத்து மெல்லெழுத்தின் சார்பால் மெல்லெழுத்தாகும் இயல்பு மலையாளத்தில் இன்று நிலைத்துவிட்டது தமிழிலும்