பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் fí3

தளகர்த்தர் நைல் ஆற்றில் ரோசெட்டா (Rosetta) என்னும் கிளையின் முகத்துவாரத்தின் அருகில் எழுத்துகள் பொறித்த தகட்டுக்கல் ஒன்றைக் கண்டெடுத்தார். அது ரோசெட்டாக்கல் எனப்படும். *

இந்தக் கல்லில் மூன்றுவித எழுத்துகள் காணப் படுகின்றன. மேற்பகுதியிலுள்ள சித்திர எழுத்து 14 வரிகள் அதற்குக் கீழேயுள்ள மக்கள் எழுத்து 32 வரிகள் சித்திர எழுத்துப் பகுதியில் ஒரு பகுதி உடைந்து போயிருந்தது மக்கள் எழுத்தில் 15 வரிகள் அழிந்து போயிருந்தன. கிரேக்க எழுத்தின் இறுதிப்பகுதி சிதைந்து இருந்தது

பிரெஞ்சு அறிஞர் ஜீன் பிரான்காய் ஷான் Lurrestuurrgår (Jean Francois Champolllion) ersöruguň EGg&#3, மொழியும் காப்ட்டிக் மொழியும் தெரிந்தவர். மிகுந்த சிரமப்பட்டு இக் கல்லில் எழுதியிருப்பதை 1822-ல் தெரிந்து கூறினர். இந்தக் கல் 5ஆம் டாலமி அரசரைப் பாராட்டுவதற்காக எழுதப்பட்டதாகும், எழுதிய ஆண்டு கி. மு. 196 என்று தெரிந்தது.

இவ்வறிஞர் எகிப்திய எழுத்து முறை இதுதான் என்று கண்டுபிடித்துக் கூறியது ஜெர்மன் அறிஞர் லெப்சியரூ (Lepsius) என்பவர் கானோப்பரு தீர்ப்பு (Decree of Canopus) என்னும் கல்லைக் கண்டெடுத்தபோது' உறுதியாயிற்று. இந்தமுறையைப் பயன்படுத்தியதால் இப்போது எகிப்திய நாகரிகம் முழுவதும் தெளிவாக விளங்கியுள்ளது. இப்போது இந்தப் பழைய மொழிக்கு இலக்கணமும் அகராதியும் வகுக்கப்பட்டுள்ளன.

சித்திர எழுத்து முறை எகிப்தில் மட்டும் வழங்கியது அல்ல; சீனாவிலும், தென் அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மாயர் (Mayans), ஆரூட்டெக்குகள் ஆகியவர் களிடையேயும் வெவ்வேறு முறைச் சித்திர எழுத்துகள் வழங்கின