பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 133

ஒலி : ச் + ஒ= சோ என்று உயிர் மெய்யெழுத்தாகத் தமிழில் எழுதப்படும் (பார்க்க : ச; ஓ)

பொருள் : வாணசுரன் நகரினையும் பொதுவாகக் கோட்டையையும் குறிக்கும் பெயர்ச்சொல்லாகவும், வியப்பினைக் குறிக்கும் ஒலிக்குறிப்பான இடைச் சொல்லாகவும் தமிழில் வழங்கும்.

வரி வடிவம் : முற்காலத்தே கொம்பின்மேல் புள்ளியிட்டு எழுதினால் 'சொ' என்றும், புள்ளியிடாது எழுதினால் 'சோ' என்றும் வழங்கும் எனவும், சொ, சோ, ஒ, ஓ என்பன எழுத்து வடிவில் இடைக்காலத்தே வேறுபாடு தோன்ற எழுதப் பெறவில்லையெனவும், வீரமா முனிவர் காலத்தில் வேறுபாடு தோன்ற கொம்பு சுழித்து எழுதப்பட்டுளது எனவும் கூறினோம் (பார்க்க : ஒ; கொ; கோ), எனவும், 'சொ' என்ற எழுத்தின் வரலாறே இதன் வரலாறுமாம். r

QᏭᏫ1

ஒலி : க்+ஒள = செள என்று உயிர்மெய்யெழுத்தாகத் தமிழில் எழுதப்படும்.

பொருள் :செளபாக்கியவதி என்ற சொல்லின் முதற் குறிப்பாகச் செள என்பது வழங்கும்.

வரி வடிவம் : 'செள' என்பதனைச் சவு அல்லது ‘சவ்' என்றே எழுதியதால் செள' என்ற வடிவம் கல்வெட்டில் வழங்கக் காணோம்.