பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዝ70 த. கோவேந்தன்

பிறந்தனவுமாக வருவன 49, இங்கே ஷ =ச, ஜ=ச, ஸ-த: ஹ=க nya= னிய, tya = த்திய, d = த; இகர வீறு மறைதல், ன் ஆண்பாலீறாகச் சேர்தல், மகரம் அஃறினைச் சொற்களில் சேர்தல், ஐ=அம்: ஈற்று னகரம் கெடல் (தைலின்=தைலி) முதலிய மாறுதல்கள் வரல் காண்க

தைக்கால் (ஈறு கெட்டும் வழங்கும் சமாதி என்று பொருள்) என்பது பாரசீகச் சொல்லாம் த=தை என்றானது, பின்வந்த யகரம் மறைந்ததால் போலும் Ky=KK. தைலா (thala= பெட்டி தைலி (taili பணப்பை), தைனாத்து=நியமனம் என்பன உருதுச் சொற்களாம் ஈற்றுத்தகரம் உகரம் பெறுதல் காண்க ஈற்று ஈகாரம் இகரமாதலும், ஏ ஆகாரமாதலும் காண்க தமிழில் ஈற்றில் வரும் இகரம் சிறிது நீண்டு ஒலிப்பதும் இயல்பு என விளங்குகிறது.

தைவேனை தைவினை எனவும் வருகிறது. வட மொழியும் தமிழ்ச் சொல்லும் கலந்து ஒரு மொழி யாகவும் அரிசமாசமாகவும் வழங்குகின்றன. வான், காரன் என்ற விகுதிகளையும் காண்க

தகைவிலாங்குருவி, தைலாங்குருவி என மருவி வழங்குகிறது; தகைவி=தை, தைலே மரம் (ஒருவகைக் கட்டு மரம்) என்பதன் தோற்றம் விளங்கவில்லை.

த்+ஓ என்ற உயிர்மெய் எழுத்து (பார்க்க : த ஒ) எழுத்து வடிவில் குற்றெழுத்தின்மேல் புள்ளியிட்டும் நெட்டெழுத்தின்மேல் புள்ளியிடாதும் முன்னர் எழுதிய வழக்கம் பின் மறைந்ததால் இரண்டும் வேறுபடாமையை முன்னரே குறிப்பிட்டோம். (பார்க்க: ஒ, கொ), காலும் கொம்பும் அமையும் வரலாற்றையும் முன்னரே காண்க