பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 201

யெழுத்தாவதால் வரும் வகரம் இதழ் குவிந்தெழுகிற உ ஊ ஒள என்ற உயிரெழுத்துகளோடு இணைத்து தமிழில் மொழிக்கு முதலாவது இல்லை. இருந்தாலும், மொழிக்கு முதலாக, இதழ் குவிந்தெழும் இந்த உயிர்கள் வரும் போது, வகரக்கூறு முதலில் கேட்கிறதெனப் பலரும் கூறு கின்றனர். இந்த வகரக்கூறும் ஈரிதழ் ஒலியாகவே இருக்கக்கூடும். இ ஈ எ ஏ ஐ முதலான எழுத்துகளின் சார்பில்லாத பிற இடங்களில், இரண்டு உயிர்கள் அடுத்த டுத்து வரும்போது இந்த வகரமே உடம்படுமெய்யாக வருகிறது. உடம்படுமெய் முதலில் வருமொழியின் முதலொலிக்கு இனமாயும், வருமெனக் கூறலாம். இதுகொண்டு சொற்றொடர் தொடங்கிய காலத்தை வரையறுத்தல் கூடும். ஆனால் மிகப் பழங்காலத்தில் உடம்படுமெய் வாராத வழக்கே உண்டு.

தன்மை முன்னிலையில் னகர ஈறு ஒருமையையும், மகர ஈறு பன்மைமையும் குறிக்கும். இந்த மகரம் நீவிர் என்பதில் வகரமாதலுமுண்டெனக் கண்டோம். அவ், இவ் என்பன பன்மை யென்பது, "இவ்வே பீலியணிந்து', “அவ்வே” என ஒளவையார் புறத்தில் பாடுவதினின்றும் அறிகிறோம் இந்த அவ் என்பதே பின் ஐ எனவும் அ எனவும் திரிகிறதென்றும் கூற இடமுண்டு

“வகரக் கிளவி நான் மொழி ஈற்றது” என்று தொல்காப்பியர், அவ் இவ் உவ் தெவ் என்ற நான்கு மொழிகளில் தான் ஈறாக வருமென்று வரையறுக் கின்றார். ஆனால் அவரே வகரம், வல்லெழுத்துப் பின்வரும்போது ஆய்தமாகுமென்றும் கூறியுள்ளார். தனிமொழிக்குள்ளும், இந்தப் புணர்ச்சி வருவதாகக் கொண்டால், கஃசு, கஃபு, வெஃகா, பல பஃது முதலிய சொற்களில் கவ், வெவ் பல் முதலிய வகர ஈற்றுச் சொற்களைக் காணலாம் இந்த வழியே நோக்கம்போது அஃது என்பதிலும் அவ் என்பது பகுதியாக எஞ்சும்.

ஆனால் முதலில் பன்மையாக இருந்த அவ் என்பது அக் குதிரைகள் முதலிய இடங்களில் அ என்றும் அவ்