பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 207

நீண்டே வர உலக வழக்கிலும் காண்கிறோம் அவ் என்பன போல வகர ஈறாய் நின்றனவே இவ்வாறு நீண்டன என்று கூறி, அவ்=அவற்றின் இடை=நடுவே எனப் பிரித்துப் பொருள் கூறுவர் ஆனால் எமனோ, பர்ரோ போன்றவர்கள் இயல்பாக நீண்டிருக்கும் பகுதிகளே பின் விகுதி பெறும்போது குறுகுகின்றன என்று பொது விதி கூறுகின்றனர் அப்படியானால், ஆ, ஈ, ஊ முதலியனவே சுட்டடிகள் என்றும், அவ் முதலியன அவை விகுதிபெற்ற வடிவங்களென்றும், அவை விகுதி பெற்றன என்றறியாத நிலையில் அவற்றையே சுட்டடி என்று பிற்காலத்தார் தொண்டனரென்றும் கூறுதல் வேண்டும்.

பிறமொழிகளிலிருந்து வகரம் தமிழ்மொழியில் வரும் போது சிலபோது இரட்டைப் பகரமாதலும் உண்டு. (உ-ம்) பர்வதம்=பருப்பதம், ரகரத்தின் பின்னர் வகரத்தை இரட்டித்து எழுதும் பழக்கத்தால் இந்த முறை வந்தது போலும் பிற இடங்களில் உயிரிடையே வரும் பகரம் தமிழில் வகரமாகும் (உ-ம்) தம்=தவம் மொழி முதலில் வரும் ஒலிப்புடைப் பகரமும் (b) வகரமுமாகும் (உ-ம்) மானம்=வானம்; மிருகம்= விருகம்.

வட்டெழுத்து : தமிழ் நாட்டின் தென்பகுதியிலே முன்னாளில் தமிழை எழுதுவதற்கு வழங்கிவந்த எழுத்து வகையின் பெயர் வளைந்து வட்ட வடிவில் அமைந்த கோடுகளையே அதிகமாகப் பெற்றிருந்தமையால் இந்த வகைக்கு வட்டெழுத்து, வட்டம் என்ற பெயர்கள் உண்டாயின. சாசனங்களிலும் இங்ங்னமே குறிக்கப் tட்டுள்ளன. சுமார் கி.பி 1387-ல் பராக்கிரம தேவர் திருக்குற்றாலத்துக் கற்றாலநாத சுவாமி கோயிலின் ருேப்பக்கிருகத்தைப் புதுப்பித்தபோது அதன் சுவர்களில் இருந்த சாசனங்களைத் தனியாகப் பெயர்த் தெழுதிக் கொண்டு, கட்டடம் முடிந்த பிறகு மறு படியும் அந்தச் சாசனங்களை வெட்டியதை, திருமலை pர்ணிக்கை