பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 209

அவர்கள் கூறும் கிரந்த லிபியை வழக்கத்தில் கொணர்ந் தார்கள். ஆயினும் ஆரிய எழுத்து என்று அவர்கள் கூறும் கிரந்த லிபியை வழக்கத்தில் கொணர்ந்தார்கள். ஆயினும் ஆரிய எழுத்துகள் க, ச, ட, த, ப ஆகிய வல்லினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒலி வகையில் அமைந்த நான்கு எழுத்துகள் உள்ளமையால் வடமொழிச் சொற்கள் அதிகம் கலக்காமல் மொழியைப் பழைய முறையிலேயே வழங்கிவந்த நாட்டு மக்கள் ஆரிய எழுத்தைப் பயன்படுத்தவில்லை; வட்டெழுத்தையே பயன்படுத்தி வந்தனர் எனினும் அது தன் உருமாறிக் காலப்போக்கில் கோலெழுத்து வகை அண்மைக்காலம் வரையில் மாப்பிள்ளைகள் எனப்படும் முகம் மதியர்களிடையில் வழக்கிலிருந்தது.

இவ்வகையில் உற்பத்தியைப் பற்றி ஆசிரியர் களிடையே பலவிதமான கருத்துகள் இருந்து வந்தன. கரோஷ்டியினின்றும் தோன்றி வளர்ச்சி பெற்று இந்தியாவில் வழக்கில் இருந்த ஒரேவகை எழுத்து இது வென்று மகாமகோபாத்தியாய டாக்டர் ஹரப்பிரசாத சாரு திரி கருதினார். ஆனால் அவ் விதம் கருதியதற்கான காரணம் ஒன்றையும் எடுத்துரைக்கவில்லை. அவ் விதம் இருக்க முடியாது.

இது பிராமியினின்றும் வளர்ச்சியடைந்ததன்று எனவும், அந்த பிராமிக்கு மூலாதாரம் என ஒருகாலத்தில் கருதப்பட்ட பீனிஷிய எழுத்துக்களினின்றும் தமிழ் மக்களால் நேராக அமைத்துக்கொள்ளப்பட்டது எனவும் டாக்டர் பர்ரெல் கருதினார். தமிழ் நாட்டில் ஆரியர் குடியேறித் தங்கள் நாகரிகத்தைப் பரப்புவதற்கு முன்பு இது பிராமியின் வழி வந்ததாக இருக்க முடியாதென்பதும் அவர் கொள்கை. ஆயினும் பிராமிக்கும் வட்டெழுத்துக்கும் உள்ள நெருங்கிய ஒற்றுமைகளைக் கவனிக்காமல் இல்லை.

டாக்டர் பீலர் இக்கொள்கையை மறுத்து, வட் டெழுத்து பிராமியினின்றும் வளர்ந்ததென்று ஒப்புக்