பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 த. கோவேந்தன்

நேர்த்தியான வளைவுடன் கூடிய அழகிய கோடு களாயிருந்தன. ஹர்ஷவர்த்தனரின் செப்பேடுகளிலும், மெளக்கரி முத்திரைகளிலும் உள்ள எழுத்துகள் அக்காலத்து நாகரி எழுத்துகளின் சிறந்த உதார ணங்கள் ஆகும்.

கங்கைப் பிரதேசத்தில் கையாண்ட எழுத்துகளின் பிற்கால வளர்ச்சி கூர்ஜரம்- பிரதிகரர்களின் சாசனங் களிலும் அதற்கும் பிற்பட்ட காஹ வாலர்களின் சாசனங் களிலும் காணப்படுகின்றன. 11, 12ஆம் நூற்றாண்டுகளில் வழங்கிய பரமார எழுத்தும், சந்தேல எழுத்தும் செவ்வக மான உயரம் குறுகிய எழுத்துகளாயிருக்கின்றன.

வங்காளத்தில் காணப்படுவது போன்ற வடிவங் களை ஏறத்தாழ ஒத்த மற்றொரு திட்டமான வகை கலிங்க எழுத்தாகும். ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் நாகரி எழுத்தும் அரிதாகப் பயன் பட்டது. பல்லவர் காலத்து நாகரி எழுத்தைக் காஞ்சீ புரத்துக் கைலாச நாதர் கோயிலின் விருதுகளைக் காட்டும் அலங்கார எழுத்துகளில் காணலாம். இந்த எழுத்துகளில் ஆணித்தலை வகை மேற்கோடுகள் ஏரனில் கிடைத்த குப்தர் சாசனங்களில் உள்ள பெட்டித்தலை வகை போன்று காணப்படுகின்றன. ஆதிமேலைச் சாளுக்கியர்கள் நாகரியை மிகவும் அரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள். தக்கண ராஷ்டிர கூடர் களுடைய சாசனங்களில் பல தெலுங்கிலும் கன்னடத் திலும் இருந்தபோதிலும், அவர்கள் நாகரியை அதிக மாகப் பயன்படுத்தியவர்கள்.

பிற்கால மேலைச் சாளுக்கியர்களும், காகதீயர்களும், அதற்குப் பின்வந்த விஜய நகர மன்னர்களும், கன்னடம், தெலுங்கு இவற்றுடன் நாகரியையும் பயன்படுத்தி னார்கள். யாதவர்கள் தங்களுடைய சாசனங்களில் நாகரியைத் தங்கு தடையில்லாமல் கையாண்டார்கள். விஜயநகர நந்தி நாகரி எழுத்து சாளுக்கிய, காகதீய, யாதவ