பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 த. கோவேந்தன்

வாகவும் காணப்படுகின்றன எல்லா மொழிகளிலும் இந்தக் குறை உள்ளது எந்த மொழியிலும் பேசப்படும் ஒலிகள் எல்லாவற்றையும் எழுதுவதற்குப் போதுமான எழுத்துகள் இல்லை. அதனாலேயே, ஒலியெழுத்து முறை (Phonetic alphabet) என்ற ஒன்றை அறிஞர்கள் அமைத்துப் பயன்படுத்தி வருகின்றனர் அதுவே பல மொழிகளின் ஒலிக் கூறுகளை ஆராய்வதற்கு உதவு வதாக, ஒலியியல் ஆராய்ச்சிக்குத் துணைபுரிவதாக உள்ளது. (மு. வ)