பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 79

உரசு ஒலியாக 'loch என்ற ரூ காட் மொழிச் சொல்லிற் போல வருவதனை முற்றாய்தம் என்றும், ach என்ற ஜெர்மன் சொல்லிற்போல வரும் வல்லண்ண உர சொலியை ஆய்தக் குறுக்கம் என்றும், இலக்கணப் புலவர்கள் (யாப்பருங்கலம்) பிற்காலச் சோழப் பேரரசின் தொடக்கத்தில் கூறலாயினர்.

பிற்காலத்தில் ஆய்தம் வேண்டாத நிலையில் கால்டுவெல் இதனை இலக்கணப் பண்டிதர் கற்பனை என்று கூறுதற்கு இடம் ஏற்பட்டது கஃசுஅரை என்பதனைக் கசரை எனக் கல்வெட்டும் எழுதத் தொடங்கியது

ஆய்த எழுத்தின் சார்பினால் உரசு எழுத்துக்களே அன்றி kh, g, gh என்பன போன்ற எழுத்துக்களும் தோன்றும் என்பது மாணிக்க நாயக்கர் கொள்கை மெய் என்றும் உயிர் என்றும் எழுத்துக்களை வேறு பிரிப்பது அருமை ஆதலின் எழுத்து ஒலி எனப் பொது வகையில் வித்தாக நிற்பது ஆய்தம் என்பர் டாக்டர் சங்கரன் (Phonetics ofoldTamil) நச்சினார்க்கினியர் ஆய்தத்தினை ஏனை ஒற்றுக்களைப்போல உயிரேறாது ஒசை விகாரமாய் நிற்பது என்பர் (தொல் எழுத் 2. உரை) உந்தி எழும் ஒலி நாதமாத்திரையாய் நிற்கிற அகர நிலையைப் பழைய உரையாசிரியர்கள் கூறுவது இங்குக் கருதத் தக்கது (குறள் 1, பரிமேலழகர் உரை).

வரிவடிவம் ஆய்தம் என்பது அடுப்புக்கல் போல மூன்று புள்ளி வடிவாக எழுதுவது இந்நாளைய வழக்கம் கேடயம் என்ற ஆயுதத்தில் தோன்றும் முக்குமிழி போலத் தோன்றலின் ஆய்தம் என்ற பெயர் வழங்கியது என்பர் சிலர். ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்ற தொல்காப்பியச் + சூத்திரத்தையும் இந்த வடிவமே ஆய்தத்தின் வடிவம் என்றற்கு நச்சினார்க்கினியர் சுட்டுவர் (தொல், எழுத். 2 உரை) அங்குக் கூறிய முப்பாற்புள்ளி குறிப்பது குற்றியலிகரம், குற்றியலுகரம்,