பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. இலக்கணம் அருளிய இறையனார்

பாண்டிய நாட்டில் பஞ்சம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாணடிய நாட்டை உக்கிரப் பெருவழுதி என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவன் காலததில் பாண்டிய நாட்டில் பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டது. பருவ மழை சிறிதும் பெய்யாத காரணத்தால் பன்னிரண்டு ஆண்டுகள் அப்பஞ்சம் நீடித்தது. மக்கள் நீரும் உணவும் கிடையாமல் மிக்க துன்பம் அடைந்தனர். அதனால் அவர்கள் வளமுள்ள நாட்டைத் தேடிச் சென்றனர்.

பாண்டியன் வேண்டுகோள்

களஞ்சியத்தில் பொருள் இல்லாமையால் பாண்டியன் மிகவும் வருந்தினான். அவன் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்க முடியாமல் அல்லற்பட்டான். ஒருநாள் அவன் புலவர்களைத் தன் அரசவைக்கு வருமாறு அழைத்தான். அவர்களிடம் நாட்டின் பஞ்ச நிலையைப் பற்றிச் சொன்னான். அதனால் தான் படுந்துன்பத்தையும் எடுத்துக் கூறினான். ‘நீங்கள் வளமுடைய வேறொரு நாட்டிற்குக் செல்லுங்கள்!’ என்று வேண்டினான். 'மழை

த . கா. த.-2