இலக்கணம் அருளிய இறையனார்
7
அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினான். தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ஏவலாட்கள் சென்று தேடினர். அவர்கள் புலவர்கள் பலரை அழைத்து வந்தனர். பாண்டியன் அவர்களைச் சங்கத்தில் அமருமாறு செய்தான்.
மன்னன் வருத்தம்
சங்கத்தைக் கூட்டிய பாண்டியன் தமிழ் இலக்கணத்தைப் புதிய முறையில் அமைக்க எண்ணினான். காலத்திற்கு ஏற்றவாறு இலக்கணத்தை மாற்றி அமைக்கக் கட்டளையிட்டான். தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று கூறப்படும். எழுத்து, சொல், யாப்பு, அணி இவற்றில் வல்லமை வாய்ந்த புலவர்கள் சங்கத்தில் இருந்தனர். பொருள் இலக்கணத்தில் புலமை உடையவர் ஒருவரேனும் அங்கு இல்லை. அதனை அறிந்த பாண்டியன் மிகவும் வருந்தினான். 'எழுத்தும் சொல்லும் கற்பது பொருளை அறிவதற்கு அல்லவா ? பொருள் இலக்கணத்தைப் பெற வழி இல்லையே? அப்படியானால் மற்ற இலக்கணங்களைப் பெற்றும் பயன் இல்லை' என்று சொல்லி வருந்தினான்.