இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலக்கணம் அருளிய இறையனார்
11
விரும்பினான். அதற்குப் புதிய முறையில் இலக்கணம் அமைக்க எண்ணினான். அச்செயலைச் செய்யத்தக்க புலவர் இல்லை. இறைவரே அரசன் விரும்பிய இலக்கணத்தை அமைத்துக் கொடுத்தார். பொதுநலம் விரும்பிய மன்னன் கவலையைக் கடவுளே போக்கியருளினார் அல்லவா! அதுபோலப் பொதுநலம் காப்பவர்க்குக் கடவுள் எப்பொழுதும் துணையாக இருப்பார் என்ற உண்மை விளங்குகிறது அல்லவா ?
—