பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைகண்ட உத்தமன்

13

இல்லை. ஆதலின் உப்பூரிகுடி கிழார் தமக்கு மக்கட் செல்வம் இல்லையே என்று மிக்க வருத்தம் கொண்டார்.

பிள்ளைச் செல்வம் பெறுதல்

அவர் நாள்தோறும் மதுரைத் திருக்கோவிலுக்குச் செல்லுவார். அங்கே எழுந்தருளும் சொக்கலிங்கப் பெருமானை மிக்க பத்தியுடன் வழிபடுவார். அப்பெருமானிடம் தமக்குப் பிள்ளையில்லாக் குறையினை முறையிடுவார். நன் மகவு ஒன்றைத் தந்தருள வேண்டும் என்றும் நாள்தோறும் வரம் கேட்பார். அவ்வாறு வழிபட்டதன் பயனாக அவருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அது முருகனைப் போல் மிகவும் அழகாக இருந்தது. அதன் முகத்தில் அறிவொளி நன்றாக வீசியது. அது தெய்வத்தன்மை வாய்ந்த ஒரு குழந்தையாகத் தென்பட்டது.

உருத்திரசன்மன்

அக்குழந்தையின் சிறப்பைக் கண்ட உப்பூரிகுடி கிழார் ஒப்பில்லாத உவகை அடைந்தார். அக் குழந்தைக்கு ‘உருத்திரசன்மன்’ என்று பெயர் சூட்டினார். சிவபெருமானுக்கு 'உருத்திரன்’ என்பது ஒரு பெயர். சிறந்த அறிவுடைய ஒருவனைச் ‘சன்மன்’