16
தமிழ் காத்த தலைவர்கள்
பாண்டியன் வியப்பும் வினாவும்
சங்கப் புலவர்கள் கூறிய செய்தியைப் பாண்டியன் கேட்டான். அவர்களை நோக்கி, "நீங்கள் நாற்பத்தொன்பது பேர்களும் நாட்டிலேயே புகழை நாட்டிய பெரும் புலவர்கள் அல்லவா? உங்களுக்கு மேலான ஒருவன் எங்கே உள்ளான் ? அவனைத் தேடி அடைவது எப்படி?” என்று வினவினான்.
இறைவனிடம் முறையிடுதல்
பின்பு அவன் மதுரைத் திருக்கோவிலை நோக்கி நடந்தான். சங்கப் புலவர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். எல்லாரும் சொக்கநாதக் கடவுளின் திருமுன் போய் நின்றனர். பாண்டியன் அக்கடவுளிடம் முறையிட்டு வேண்டினான். "இறைவரே! இப்புலவர்கள் விரும்பியவாறே ஒரு நடுநிலையாளனைத் தந்தருள வேண்டும்" என்று வணங்கி நின்று வேண்டினான்.
வானில் எழுந்த ஒலி
அப்போது எல்லாரும் கேட்குமாறு வானில் ஓர் ஒலி எழுந்தது, "இந்நகரைச் சேர்ந்த உப்பூரிகுடியின் தலைவர் ஒருவர் உள்ளார்; அவர் உப்பூரிகுடி கிழார் என்னும் பெயரை உடையார் ; அவருக்கு ஒரு மகன்