18
தமிழ் காத்த தலைவர்கள்
மனை அழைத்துவங்தனர். அவனுக்கு வெண்ணிறமான பட்டாடையை உடுத்தினர். அவன் தலையில் வெண்ணிறமான பூமாலையைச் குட்டினர். அவன் உடம்பில் மணமுடைய சந்தனத்தை அணிந்தனர். அவனைச் சங்கப் பலகையில் ஏற்றி அமரச் செய்தனர். சங்கப் புலவர்கள் ஒவ்வொருவராகத் தத்தம் உரையை அவன் முன்பு எடுத்துக் கூறினர்.
மருதன் இளநாகனார் உரை
நாற்பத்தேழு புலவர்கள், வரிசையாகத் தத்தம் உரையை வாசித்துக் காட்டினர். அவற்றையெல்லாம் உருத்திரசன்மன் அமைதியுடன் கேட்டான், அதுவரை அவன் முகம் மலரவே இல்லை : சும்மா இருந்தான். மருதன் இளநாகனார் என்னும் புலவர் தமது உரையைச் சொல்லத் தொடங்கினார். அவர் உரை சொல்லும்போது சில இடங்களில் மட்டும் உருத்திரசன்மனது முகம் மலர்ந்தது ; அவன் கண்களில் ஆனந்தக்கண்ணிர் சிங்தியது; உடம்பில் உள்ள உரோமங்கள் சிலிர்த்தன.
நக்கீரர் வரைந்த நல்லுரை
இறுதியில் சங்கத் தலைவராகிய நக்கீரர் எழுந்தார். உருத்திரசன்மன் முன்னர்ப்போய் அமர்ந்தார். தாம் எழுதிய உரையினை முறை