தமிழ் வளர்த்த வழுதி
21
அடர்ந்த காவல்காட்டை அமைத்து இருந்தான். இவ்வாறு அமைத்த பெரிய அரணைச் சுற்றிச் சிற்றரண்கள் பலவற்றைக் கட்டியுமிருந்தான்.
வேங்கை மார்பன் வீரம்
இத்தகைய வலிமை வாய்ந்த கோட்டையுள்ளே வீரனாகிய வேங்கை மார்பன் வீறுடன் வாழ்ந்து வந்தான். அவன் தனது உள்ளத் துணிவாலும் உறுதியான கோட்டையாலும் மிகுந்த செருக்குடன் இருந்தான். ஆதலால் அவன் பேரரசனாகிய பாண்டியனுக்கு அடங்கித் திறை செலுத்தவில்லை.
முற்றுகையும் வெற்றியும்
இச்செயலை அறிந்த உக்கிரப்பெருவழுதி அவன்மீது அடங்காச் சினம் கொண்டான். அவன் பெரிய படை யொன்றைத் திரட்டினான். கானப்போர் ஊரை முற்றுகையிட்டான். கோட்டையுள் இருந்த வேங்தை மார்பன் மனம் கொதித்துப் போருக்கு எழுந்தான். பாண்டியன் அவனைப் போரில் வென்று அவனது பெரிய கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான்.
கானப்பேர் எயில் கடந்தான்
கோட்டையை இழந்த வேங்கைமார்பன் திரும்பவும் பெரும் படையுடன் பாண்டியனை
த.கா.த.-3