24
தமிழ் காத்த தலைவர்கள்
பாண்டியன் பாராட்டு
அவன் திருவள்ளுவரின் தெய்வப் புலமையை வியந்து பாராட்டினன். 'வேதம் ஒதிய நான்முகனே வள்ளுவராய்த் தோன்றினான்; நான்கு வேதங்களின் உண்மைப் பொருளைத் திருக்குறளாகப் பாடிக்கொடுத்தான்; இந்த நூலைத் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தலையால் வணங்கவேண்டும்; வாயார வாழ்த்த வேண்டும் , நெஞ்சாரக் கற்கவேண்டும், செவியாரக் கேட்க வேண்டும்' என்று நாடு முழுதும் பறையறைந்து அறிவித்தான்.
உணர்த்தும் உண்மைகள்
இங்ஙனம் உக்கிரப்பெருவழுதி பல தமிழ்த் தொண்டுகளைச் செய்தான் , சங்கப் புலவர்களை ஆதரித்துத் துங்கத் தமிழை வ்ளர்த்தான்; தமிழ் நூல்கள் அழிந்து போகாதவாறு காத்தான். அவனது வரலாற்றால் அறிவது என்ன ? காட்டை ஆளும் அரசன் முதல் காட்டில் வாழும் எளிய மகன் வரை எல்லாருக்கும் தாய்மொழிப் பற்று வேண்டும். அதனைக் காக்க ஒவ்வொருவரும் முயல வேண்டும். இவ்வுண்மைகளை இவ்வரலாறு நமக்கு உணர்த்துகிறது அல்லவா?
—