26
தமிழ் காத்த தலைவர்கள்
தொன்பது புலவர்கள் இருந்தனர். அவர்களுக்குத் தலைவராக விளங்கிய புலவரே நக்கீரர் என்பவர். கீரம் என்பதற்குச் 'சொல்' என்பது பொருள். நக்கீரம் என்பதற்கு நல்ல சொல் என்பது பொருள். இவர் நல்ல சொற்களை அமைத்துப் பாட்டு இயற்றுவதில் வல்லவர். ஆதலின் நக்கீரர் என்ற பெயரைப் பெற்றார் என்று சிலர் கூறுவர். சீரம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பால் என்பது பொருள். அச்சொல் தமிழில் ‘கீரம்’ என்று கூறப்படும். நக்கீரம் என்பதற்கு இனிய பால் என்பது பொருள். நக்கீரர் இனிய பாலைப் போன்ற சுவையான பாட்டுக்களை இயற்றும் புலவர். அதனால் நக்கீரர் என்ற பெயரைப் பெற்றார் என்று சிலர் கூறுவர். இவரைச் சங்கு அறுக்கும் குலத்தில் பிறந்தவர் என்று வேறு சிலர் கூறுவர். கீர்கீர் என்று சங்கை அறுப்பவர் கீரர் என்ற பெயரைப் பெற்றார் ; அக்குலத்தில் பிறந்த நல்லவர் நக்கீரர் என்று சொல்லப் பெற்றார். இவ்வாறு அவருக்கு நக்கீரர் என்ற பெயர் வந்ததற்குப் பல காரணங்கள் கூறுவதுண்டு.
கொண்டான் கொண்ட பித்து
நக்கீரர் காலத்தில் மதுரையில் சில வட மொழிப் புலவர்களும் வாழ்ந்தனர். அவர்