பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

தமிழ் காத்த தலைவர்கள்

தமிழ் தீது’ என்று முழங்கினான். சங்க மண்டபத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் காதில் அவன் சத்தம் விழுந்தது. சங்கத் தலைவராகிய நக்கீரர் காதையும் அச்சத்தம் துளைத்தது. உடனே அவர் சங்கப் பலகையை விட்டு எழுந்தார். அவரைப் பின்தொடர்ந்து மற்றைய புலவர்களும் எழுந்தனர். எல்லாரும் சங்க மண்டபத்தின் வாயிலுக்கு வநதனர்.

நக்கீரர் காதுக்கு நாராசம்

தமிழ்ச் சங்கப் புலவர்கள் எல்லாரும் ஒன்று கூடி நிற்பதைக் கொண்டான் கண்டான். உடனே தன் பறையை ஓங்கி அடித்தான், உரக்கப் பேசினான்: "மதுரைமாநகரில் வாழும் மக்களே ! நன்றாகக் கேளுங்கள் ; ஆரியம் நன்று, தமிழ் தீது ; ஆதலின் ஆரியத்தை ஆர்வத்துடன் படியுங்கள்!" என்று முழங்கினான். கொண்டான் கூறிய சொற்கள், நக்கீரர் காதுகளில் நாராசத்தைக் காய்ச்சி ஊற்றினாற்போல இருந்தது. அவன் சொற்களைக் கேட்டுத் தமிழ்ப் புலவர்கள் ஆத்திரம் கொண்டனர். நக்கீரர், கொண்டானை அருகில் வருமாறு அழைத்தார். அவனும் நக்கீரரின் பக்கமாக வந்தான்.