இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சங்கத் தலைவர் நக்கீரர்
29
உரையாடல்.
நக்கீரர் : கொண்டானே ! நீ பறை அறைந்து கூறும் செய்தி என்ன?
கொண்டான் : 'ஆரியம் நன்று, எல்லாரும் அதனைப் படியுங்கள்' என்று அறிவித்தேன்.
நக்கீரர் : அவ்வளவுதான் சொன்னாயா? அதற்கு மேலும் சொன்னாயா?
கொண்டான் : அதற்குமேல் நான் ஒன்றும் சொல்லவில்லையே!
நக்கீரர் : ஆரியத்தைப் படித்தால் பொய்யும் சொல்ல வேண்டுமோ? ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் சொல்லியதை மறைக்கின்றாயே! இது முறையா?
கொண்டான் : எது முறை ? எது முறையில்லை? இதைக் கேட்பதற்கு நீர் யார்!
நக்கீரர் : நான் தமிழ்ச் சங்கத்தின் தலைவன் , தமிழைக் காக்குந் தலைவன் ; நீ 'தமிழ் தீயது ' என்று இங்கு உள்ளவர்களிடம் உரைத்தாய் அல்லவா? அவ்விதம் நீ சொல்லக் காரணம் என்ன?
கொண்டான் : நான் வடமொழியாகிய ஆரியத்தைப் படித்தேன். அதன் சிறப்பையும் இன்பத்தையும் அறிந்தேன். அதனை