பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தமிழ் காத்த தலைவர்கள்

மக்களுக்கு எடுத்துக் கூறினேன். இதைத் தடுப்பவர் யார்?

நக்கீரர் : ஆரியத்தின் சிறப்பை அறிந்த நீ அதனை எல்லாருக்கும் சொல்லுவதில் தடையில்லை, அதனை நன்றாகச் சொல்லுக! ஆனால் 'தமிழ் தீது' என்று சொல்லுவதை மட்டும் இப்போதே நிறுத்தி விடுக!

கொண்டான் : நான் எதற்காக அதனை நிறுத்த வேண்டும் ?

நக்கீரர் : நீ தமிழ்நாட்டில் பிறந்தவன் தானே ? உன் தாய்மொழி தமிழ்தானே? நீ முதன் முதல் கற்றது தமிழ்தானே? உன் தாய்தானே உனக்குச் சிறந்தவள்? பெற்ற தாயை வெறுப்பவன் உலகில் உண்டா?

கொண்டான் : நான் தமிழன் என்பதற்காக வடமொழியைப் படிக்கக் கூடாதா ? அதன் சிறப்பைப் பிறர்க்கு உரைக்கக் கூடாதா ?

நக்கீரர் : அவையெல்லாம் நன்றாகச் செய்க! ஆனால் தமிழைப் பழித்துமட்டும் பேசாதே. தமிழைப் பழிப்பது தாயைப்