பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தலைவர் நக்கீரர்

33

செய்யத் தவறிவிட்டீர்கள். அதனால் அவன் ஆரியம் நன்று, தமிழ் தீது' எனறு பறை சாற்றிக்கொண்டு திரிகிறான். இனியாவது அவனுக்கு நல்லறிவை ஊட்டுக' என்று சொன்னார்.

ஆரியம் நன்று தமிழ் தீ(து) என உரைத்த
காரியத்தால் காலக்கோள் பட்டானைச்-சீரிய
அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால்
செந்தமிழே தீர்க்க சுவா கா "

என்று மீண்டும் ஒரு சிறு பாடலைப் பாடினார்.

உயிர்பெற்ற கொண்டான்

உடனே பிணமாகக் கிடந்த கொண்டான் கண்விழித்தான். உறங்கி விழிப்பவனைப் போலக் கைகால்களை உதறிக்கொண்டு எழுந்து நின்றான். தரையில் கிடந்த பறையை எடுத்துக் கழுத்தில் மாட்டிக்கொண்டான். திரும்பவும் முன்போலவே 'ஆரியம் நன்று தமிழ் தீது' என்று கத்திக்கொண்டு பறையை அடிக்கத் தொடங்கினான். உடனே அங்கு நின்ற தாய் ஒடி வந்து அவன் வாயைப் பொத்தினாள். " மகனே! என்ன நடந்தது என்பது உனக்குத் தெரியாதா? நீ இவ்வாறு சொல்லித்தானே உயிரை இழந்தாய், எங்களுடைய வேண்டுகோளால் நக்கீரர் மனம் இரங்கினார். இப்போதுதான் உனக்கு உயிர்ப்