பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கப் புலவர் சாத்தனார்

37

அவர் அவற்றின் தரத்தை அளந்து சொன்ன பிறகே அவை அரங்கேற்றப்படும். அதன் பின்னரே நாட்டுமக்களுக்கு வெளியிடப் பெறும். அவர் ஒரு நூலேயோ பாடலையோ தரத்தில் குறைந்தது என்று கூறிவிட்டால் அதனை அரங்கேற்ற முடியாது ; நாட்டில் பரப்பவும் முடியாது.

பாராட்டும் பரிசும்

இம்முறையில் சீத்தலைச் சாத்தனார் சங்கத்தில் பணிசெய்து வந்தார். நாள்தோறும் பல புலவர்கள் சங்கத்திற்கு வருவார்கள். அவர்கள் தனித்தனிப் பாட்டுக்களை இயற்றிக்கொண்டு வருவார்கள். சிலர் நூல்களையும் இயற்றிக்கொண்டு வருவர். அவற்றையெல்லாம் சாத்தனார் எழுத்து விடாமல் வாசித்துப் பார்ப்பார். சிறந்த பாடல்களைப் பாராட்டுவார். அவற்றைப் பாடிய புலவர்களுக்குப் பாண்டியன் பரிசு அளிக்குமாறு செய்வார். அவற்றை நாட்டில் பரப்புவதற்கு இசைவு கொடுப்பார். தகுதியில்லாத பாட்டுகளைக் கண்டால் அவற்றை எழுதிய ஏடுகளேயே கிழித்து எறிவார்.

சாத்தனார் தலைவலி

இவ்வாறு தமிழைக் காத்து வந்த சாத்தனாருக்குத் தலைவலி ஏற்பட்டது. அவர் எப்

த.கா.த.-4