38
தமிழ் காத்த தலைவர்கள்
போதும் பல புலவர்களின் பாட்டுக்களைப் படித்து வந்த காரணத்தால் அத்தலைவலி ஏற்பட்டது. உலகம் முழுவதுக்கும் பயன்படக்கூடிய ஒரு நூல், தமிழில் தோன்றவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அதனால் அவரது தலைவலி நாளுக்கு நாள் பெருகி வந்தது.
மருத்துவன் தாமோதானார் மருந்து
இவர் காலத்தில் மருத்துவர் ஒருவர் சங்கப் புலவராக இருந்தார். அவருக்குத் தாமோதரனார் என்று பெயர். அவரைப் புலவர்கள் மருத்துவன் தாமோதரனார் என்று கூறுவர். அவர், சாத்தனார் தலைவலியால் வருந்துவதைக் கண்டார். அவருக்காகத் தனியே புதிதான மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். அதனை மோந்து பார்த்தால் எத்தகைய தலைவலியும் நீங்கிவிடும். அந்த மருந்தைச் சாத்தனரிடம் கொடுத்து மோந்து பார்க்குமாறு வேண்டினார். அவரும் அதனை மோந்து பார்த்தார். ஆனால் அவரது தலைவலி நீங்கவில்லை. அது கண்டு தாமோதரனர் மிகவும் வருங்தினார்.
நோய் தீர்த்த நூல்
அந்நாளில் திருவள்ளுவர் திருக்குறள் நூலைச் சங்கத்திற்குக் கொண்டு வந்தார்.