40
தமிழ் காத்த தலைவர்கள்
திருவள்ளுவ மாலை
சங்கத்தில் இருந்த புலவர்கள் எல்லாரும் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாமாலை தொடுத்தனர். அவர்கள் புகழ்ந்து பாடிய பாட்டுக்களை ‘திருவள்ளுவ மாலை’ என்று சொல்லப்படுகிறது. சீத்தலைச் சாத்தனர் திருக்குறள் நூலைப் பலகால் படித்துத் தலைவலி நோய் நீங்கினார். அவர் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன்' என்று போற்றினார்.
கோவலன் கொலை
இப்புலவர் வாழ்ந்த காலத்தில் காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து கோவலன் என்பான் மதுரைமாநகருக்கு வந்தான். அவன் தன் மனைவியாகிய கண்ணகியின் காற்சிலம்பை விற்பதற்காகக் கடை வீதியில் வந்துகொண்டிருந்தான். அப்போது அரண்மனைப் பொற் கொல்லனை அவன் சந்தித்தான். அவனிடத்தே கோவலன் சிலம்பைக் காட்டி விலை மதிக்க வேண்டினான். அப் பொற்கொல்லன் அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன். அவன் இச்சிலம்பைப் பார்த்தவுடன் கோவலன் மீது பழியைச் சுமத்த எண்ணினான். அரசனிடம் விரைந்து சென்றான். சிலம்பைத் திருடிய கள்வனைக் கண்டு பிடித்து விட்டேன் என்று முறையிட்டான். உடனே