சங்கப் புலவர் சாத்தனார்
49
மணிமேகலைக் காவியம்
கோவலன் கொஞ்ச காலம் மாதவியென்னும் பொது மகளுடன் வாழ்க்கை நடத்தினான். அப்பொழுது மாதவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குக் கோவலன், மணிமேகலை என்று பெயர் சூட்டினான். கோவலன் மதுரையில் இறந்த செய்தியை மாதவி அறிந்தாள். உடனே அவள் துறவு பூண்டு தவச்சாலையை அடைந்தாள். அவள் மகளாகிய மணிமேகலையும் துறவை மேற்கொண்டாள். இளமையிலேயே துறவு பூண்ட மணிகேமலை அறங்கள் பலவற்றைச் செய்தாள். அவளுடைய துறவு வாழ்க்கையைச் சாத்தனார் ஒரு நூலாகப் பாடினார். அந்நூலுக்கு மணிமேகலை என்றே பெயர் அமைத்தார். அந்நூல் தமிழ்த்தாயின் இடையில் அணிந்த மேகலை என்னும் அணியாக மிளிர்கிறது.
உணர்த்தும் உண்மைகள்
இவ்வாறு சாத்தனார் தமிழில் நல்ல பாடல்கள் தோன்றுமாறு செய்தார்; சிறந்த நூல்கள் தோன்றத் துணைபுரிந்தார். அவரே ‘மணிமேகலை’ என்ற அழகிய நூலையும் இயற்றினார். இத்தகைய பல தமிழ்த் தொண்டுகள்