பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் காத்த தலைவர்கள்

தமையனிடம் தம்பி

அதைக் கேட்டு மகிழ்ந்த அதிவீரராமன் அந்நூலை எடுத்துக்கொண்டு தமையனிடம் சென்றான். வரதுங்கராமன் தன் தம்பியை அன்புடன் வரவேற்றான். இருவரும் சிறிது நேரம் அளவளாவினர். பின்பு அதிவீர ராமன் நைடத நூலைத் தமையனிடம் கொடுத்தான். “அண்ணலே! தாங்கள். இந்நூலைப் படித்துப் பார்க்கவேண்டும்; இதன் சிறப்புக்களை எடுத்துரைக்க வேண்டும்” என்று வேண்டினான்.

தமையன் அறவுரை

வரதுங்கராமன் தன் தம்பியை நோக்கி, “இந்நூல் சொல்லும் பொருள் என்ன?” என்று கேட்டான். அதற்கு அதிவீரராமன், “இந்நூல் நளனுடைய வரலாற்றை நவில்வது,” என்று கூறினான். அது கேட்ட வரதுங்கராமன், “தம்பி! நளன் நம்மைப் போன்று ஒரு மன்னவன் தானே; அவனுடைய வரலாற்றையோ நீ பாடவேண்டும்? உலகில் பிறந்திறக்கும் மக்களைப் பாடுவதால் என்ன பயன் விளையும்? பிறப்பு இறப்பு இல்லாத சிறப்புடைய இறைவன் புகழைப் பாடினால் நிறைந்த பயன் ஏற்படும். அதனால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெற-