பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் காத்த தலைவர்கள்


1. தமிழும் தலைவரும்

தமிழின் பழைமையும் தலைமையும்

உலகில் பல மொழிகள் வழங்குகின்றன. இக்காலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவற்றுள் மிகவும் பழைமையான மொழிகள் சிலவே. தமிழ், வடமொழி, இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளே மிகப் பழைமையானவை. அவற்றுள்ளும் ஒரு சில மொழிகள் மக்களுடைய பேச்சு வழக்கிலிருந்து மறைந்துவிட்டன. நூல் வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இன்று வரை மிகச் சிறந்து வழங்கும் பழைமையான மொழிகள் ஒன்றிரண்டே. அத்தகைய மொழிகளில் தலைமையான மொழி நம் தாய் மொழியாகிய தமிழே. இதனை உலகில் உள்ள மொழி அறிஞர்கள் பலரும் ஒப்புக்கொள்வார்கள்.