பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவியம் பாடிய காவலன்

55

லாமே? இந்நூலை யான் பார்க்க விரும்பவில்லை; உன் அண்ணியாரிடம் கொண்டு போய்க் கொடுப்பாய்; அவள் படித்துப் பார்த்து அதன் சிறப்பை உரைப்பாள்,” என்று வருத்தத்துடன் கூறினான்.

அண்ணியாரின் மறுமொழி

தமையன் மொழிகளைக் கேட்ட அதிவீரராமனுக்குச் சினம் எழுந்தது. எனினும் அதனை ஒருவாறு அடக்கிக் கொண்டான். அண்ணியாரிடம் தன் நூலை எடுத்துக் கொடுத்தான். ‘இதனைப் படித்துப் பார்த்து இதன் சிறப்பை எனக்குக் கூற வேண்டும்’ என்று வேண்டினான். அவளும் அவ்வாறே செய்வதாகக் கூறி, மைத்துனனை அனுப்பினாள். சில நாட்களில் அந்நூலைப் படித்து முடித்தாள். அவள் தன் கருத்தை ஓலையொன்றில் எழுதினாள். அதனைத் தூதன் ஒருவன் வாயிலாகத் தென்காசிக்கு அனுப்பினாள்.

தம்பியின் படையெடுப்பு

ஓலையைப் பெற்ற தூதன் தென்காசியை அடைந்தான். அரசனாகிய அதிவீரராமனை அவையில் கண்டு வணங்கினான். அண்ணியார் அனுப்பிய ஓலையைப் பணிவுடன் கொடுத்-