பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியம் பாடிய காவலன்

59

என்று பாடி, நாடாளும் மன்னனுக்கு கல்லறிவு கொளுத்தினாள்.

உணர்த்தும் உண்மை

அண்ணியாரின் அறிவுரையைக் கேட்டு அதிவீரராமன் அகமகிழ்ந்தான். அவன் சிற்றறிவுடைய புலவர்களின் தலையில் குட்டிச் சிறந்த அறிவைப் பெறுமாறு செய்தான். அவனும் நைடதம் போன்ற கன்னூல்களைப் பாடி கற்றமிழைக் காத்து வளர்த்தான். இவ் வரலாற்றால் நாம் உணர்வது என்ன ? கற்பவற்றைக் கசடறக் கற்கவேண்டும். கற்றவாறே வாழ்வில் நிற்றலும் வேண்டும். இவ்வுண்மைகளை அதிவீரராமன் செயல்களால் அறிகின்றோம் அல்லவா ?