பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச் சங்கம் அமைத்த தலைவர்

61

கோசமங்கை என்னும் இரு தலங்கள் உள்ளன. இத்தலங்களை வழிபடுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வருகின்றனர்.

சேதுபதிகளின் சிறப்பு

திருக்கோவில்களைப் பேணிக் காப்பதற்குத் தக்கார் ஒருவர் வேண்டும். தலயாத்திரை வரும் மக்களுக்குக் கள்வராலும் பிறராலும் தீங்கு நேராமல் காப்பளிக்க வல்லார் வேண்டும். இத்தகைய அரும்பணியை ஏற்று நின்றவரே சேதுபதி என்னும் சிறந்த வீரர். அவர் வழியில் தோன்றிய தலைவர்களே 'சேதுபதிகள்' ஆவர். இச்சேதுபதிகள் வீரம், தமிழ்ப்பற்று, தெய்வ பக்தி, கொடை முதலியவற்றால் சிறந்து விளங்கினார்.

பாலவனத்தம் குறுநில மன்னர்

இத்தகைய சேதுபதி மரபில் தோன்றிய சிறந்த வீரர் பொன்னுச்சாமித் தேவர் என்பார். இவர் சேதுநாட்டின் பகுதிகளாகிய பாலவனத்தம், பாலயம்பட்டி என்னும் சிற்றூர்களை ஆளும் குறுநில மன்னராக விளங்கினார். இவர் தமிழ்ப்புலவர்களை இனிது ஆதரித்த வள்ளல் ஆவார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வித்துவான் தியாக