பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ச் சங்கம் அமைத்த தலைவர்

63

அவர் பிள்ளைகள் மூவரையும் நல்ல முறையில் வளர்த்து வந்தார்.

பாண்டித்துரையின் தமிழ்ப் பயிற்சி

பாண்டித்துரைத் தேவர் கல்வி கேள்விகளில் தேர்ச்சியுற்றார். தம் சொத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பருவத்தையும் எய்தினார். பாலவனத்தம் குறுநில மன்னராக ஆட்சிப் பொறுப்பையேற்றார். இவர் சதாவதானம் முத்துச்சாமி ஐயங்காரிடம் கம்பராமாயணம் முழுவதும் பாடம் கேட்டார். மதுரை வித்துவான் இராமசாமிப் பிள்ளையிடம் பல அரிய தமிழ் நூல்களைப் பயின்றார். பழநிக் குமாரத தம்பிரானிடம் சைவசமய நூல்களை நன்றாகக் கற்றுத் தெளிந்தார். இவ்வாறு தேவர் பல புலவர்களிடம் கற்றுத் தமிழறிவையும் சமய அறிவையும் பெருக்கிக்கொண்டார்.

தேவரின் அரசவை

இவர் செய்யுள் இயற்றும் வன்மையிலும் பேச்சு வன்மையிலும் சிறந்து விளங்கினார். இவருக்கு இசையறிவும் வாய்த்திருந்தது. அதனால் வடமொழிப் புலவர்கள், தமிழ்ப் புலவர்கள், இசைப் புலவர்கள் ஆகியோர் இவர் அவையை எப்பொழுதும் அணி செய்தனர். தேவர் தம் அவையில் தமிழ் நூல்களைப்