பக்கம்:தமிழ் காத்த தலைவர்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

தமிழ் காத்த தலைவர்கள்

தமிழ் முதல்மொழி

பழைமையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ்மொழி தோன்றிய காலத்தை எவரும் இதுவரை அளவிட்டு உரைக்க முடியவில்லை. அவ்வளவு பழைமையான காலத்திலேயே தமிழ் தோன்றியுள்ளது. உலகம் தோன்றி, மக்கள் தோன்றியகாலத்திலேயே முதன்முதல் தோன்றிய மொழி நம் தமிழாக இருக்கலாம். இம்மொழியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்கள் சில இருக்கின்றன. அவைகளே தமிழின் பழைமைக்குத் தக்க சான்றுகள் ஆகும்.

புலவர்களைப் போற்றிய அரசர்கள்

இத்தகைய தமிழைத் தமிழ்நாட்டு அரசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்து வங்தனர். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தனர். அவர்கள், தம்மைப் புலவர்கள் காணவராத நாளை வீணாகக் கழிந்த நாள் என்று வெறுப்பர். அவ்வாறு புலவர்களைப் போற்றி ஆதரித்தமையால் தமிழ் வளர்ந்தது.

பாண்டியர் காத்த பழந்தமிழ்

தமிழ்நாட்டு மூவேந்தர்களில் பாண்டியர் தமிழை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்